பிரிவினையும் அகீதாவும் (கேள்வி பதில்) Posted on : 2013-07-08 Print

கேள்வி :
'பிரிவுகள் நரகம் செல்லும்' என சுட்டிக் காட்டும் ஹதீஸ் அகீதா என்று சொல்லப்படும் நம்பிக்கையில் பிரிபவர்களை விழித்துக் கூறப்பட்டதாகும். நிர்வாகத்திற்காக அல்லது அமல்கள் விடயத்தில் பிரிபவர்களை சுட்டிக் காட்டவில்லை. இன்று காணப்படும் பிரிவுகள் அகீதாவில் பிரியவில்லை என்று கூறுகின்றனரே! இதன் விளக்கம் என்ன?
 
 
பதில் :
ஒரு முஸ்லிம் குர்ஆன் சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும். மனித கருத்துக்கள் மார்க்கமல்ல. குர்ஆன், ஹதீஸில் 'பிரியாதீர்கள்' என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர 'அகீதாவில் பிரியாதீர்கள்' என்றோ, 'இது அல்லாத விடயத்தில் பிரியாதீர்கள்' என்றோ கூறப்படவில்லை.
 
அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா:
 
விசுவாசிகளே! அல்லாஹ்வின் கயிற்றை பிடித்து ஒரு கூட்டமாக இருங்கள். பிரிந்து விடாதீர்கள். (3:103)
 
என்றும்
 
மார்கத்தை நிலை நாட்டுங்கள் பிரிந்துவிடாதீர்கள். (42:13)
 
என்றும்
 
தெளிவு வந்த பின் மார்கத்தில் கருத்து மோதல் கொண்டு பிரிந்து போகிறார்களே அவர்களை போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.(3:105)
 
என்றும்
 
 
இவ்வாறே ஹதீஸில்:
 
அல்லாஹ் மூன்று விடயங்களை விரும்புகின்றான். அதில் ஒன்று அல்லாஹ்வின் கயிற்றை பிடித்து ஒரு கூட்டமாக இருக்க வேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம்)
 
என்றும்
 
யார் ஜமாஅத்திளிருந்து ஒரு சான் வெளியேறுகின்ராரோ அவர் இஸ்லாத்தை தன் கழுத்திலிருந்துக் களைந்து விட்டார்.(அஹ்மத்)
 
என்றும்
 
பொதுவாகவே வந்துள்ளதை நாம் காண்கிறோம், எனவே அகீதாவில் பிரிவதைதான் இஸ்லாம் தடுத்துள்ளது என்பது சரியன்று.