பெண்கள் மண்ணறையை தரிசிக்கலாமா? Posted on : 2014-02-22 Print

கேள்வி :
''ஆண்களுக்கு மண்ணறைகளைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது போல், பெண்களுக்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது”” என்று சில அறிஞர்களும், ''பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, மாறாக கப்றுகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபித்துள்ளதாக”” ஆதாரம் காட்டி ''அது அவர்களுக்குக்
 
கூடாது”” என்று வேறு சில அறிஞர்களும் கூறுகின்றனர். இதன் சரியான மார்க்க விளக்கம் என்ன?
 
 
பதில்:
மண்ணறைகளை பெண்கள் தரிசிப்பதை நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தடுத்திருந்தார்கள். பிறகு அனுமதி வழங்கிவிட்டார்கள். தடுக்கப்பட்ட காலகட்டத்தில் கப்றுகளைத் தரிசிக்கும் பெண்களை அல்லாஹ் சபித்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ''இப்போதும் பெண்கள் கப்றுகளை தரிசிக்கக் கூடாது”” என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். ''அனுமதி வழங்கப்பட்டது ஆண்களுக்கு மட்டுமே”” என்றும் வாதாடுகின்றனர். ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் தன் மார்க்க விடயங்களில் குர்ஆன், ஸுன்னாவுக்கு மட்டுமே முக்கியத்துவமளித்து அவ்விரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த அடிப்படையில் பெண்களும் மண்ணறைகளைத் தரிசிப்பது நபிவழியாகும். இதற்கு மூன்று ஆதாரங்களை முன்வைக்கின்றோம்.
 
 
01. ஒரு முறை அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நான் மண்ணறைகளுக்குச் சென்றால், அவர்களுக்காக என்ன சொல்வது என்று நபி (ஸல்) அவர;களிடம் கேட்க, அவர்கள்: ''இவ்வுறைவிடங்களின் முஃமின்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் சாந்தி உண்டாவதாக! நிச்சயமாக நாமும் அல்லாஹ் நாடினால் உங்களுடன் சேரக் கூடியோரே! எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பை வேண்டுகின்றேன் என்று கூறு!”” என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், நஸாஈ) இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஸியாரத் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகின்றது.
 
02. அப்துல்லாஹ் பின் அபீ முலைகா கூறுகின்றார்கள் : ஒரு நாள் அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்பராவில் (ஜனாஸா நல்லடக்கம் செய்யும் இடத்தில்) இருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ''நான் உம்முல் முஃமினீனே! எங்கிருந்து வருகின்றீர்கள்”” என்று கேட்க, ''என் சகோதரர் அப்துர; ரஹ்மான் பின் அபீபக்கர் அவர்களின் மண்ணறையைத் தரிசித்து விட்டு வருகின்றேன்”” என்றார்கள். அதற்கு நான், ''மண்ணறைகளைத் தரிசிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லையா?”” என்று வினவினேன். அதற்கு அவர்கள் ''ஆரம்பத்தில் தடுப்பவர்களாக இருந்தார்கள், பிறகு அவைகளைத் தரிசிக்கும்படி ஏவினார்கள்”” என்று கூறினார்கள். (அல்பைஹகி) இந்த ஹதீஸும் பெண்களுக்கு அனுமதியுண்டு என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
 
03. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, புறைதா அறிவிக்கின்றார்கள்: ''நான் கபுறுகளைத் தரிசிப்பதை உங்களுக்குத் தடுத்திருந்தேன். இப்போது அதனைத் தரிசியுங்கள். ஏனெனில் அது மறுமையை ஞாபகமூட்டும்.”” (ஸஹீஹ் முஸ்லிம் ) இந்த ஹதீஸிலும் நபி (ஸல்) அவர்கள்அனுமதி வழங்கும் போது, ''இது ஆண்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கின்றேன் பெண்களுக்கு அனுமதியளிக்கவில்லை ”” என்று கூறவில்லை. இந்த அனுமதி இரு சாராரையும் உள்ளடக்கும் இதை இரண்டாவது ஆதாரம் மிகத்தெளிவாகக் கூறுகின்றது. மேலும் ''மண்ணறைகளைத் தரிசிப்பது மறுமையை ஞாபகமூட்டும்”” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆண்களுக்கு மட்டுமல்ல, இது ஆண்களை விட பெண்களுக்கு மிக அவசியமானது. ஏனெனில் ''பெண்கள் பலயீனமானவர்கள்”” என்று ஹதீஸில் வந்துள்ளது. (மறுமையைப் பற்றிய நினைவிலும் பலயீனமானவர்கள்).
 
எனவே ''பெண்கள் கப்றுகளைத் தரிசிப்பது கூடாது”” என்று வாதிப்பவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அது தடுக்கப்பட்ட காலங்களில் முன்வைக்கப்பட்ட ஹதீஸ்களாகும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்வைத்த மூன்று ஆதாரங்களுக்கும் ''ஸியாரத் கூடாது”' என்பவர்கள் எடுத்துக் கூறும் விளக்கங்கள் அர்த்தமற்றவைகளாகும். எனவே ஒரு முஸ்லிம் மனித கருத்துக்களை விட்டுவிட்டு குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் முகமாக இந்த மாபெரும் சிறப்பான ஒரு வணக்கத்தை ஆண், பெண் இரு சாராரும் செயல்வடிவில் கொண்டுவர வேண்டும். மண்ணறைகளுக்குச் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறி, அவர்களுக்கும் எங்களுக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் துஆ செய்யும் பழக்கம் தொடர வேண்டும்.