நரகம் செல்லும் பிரிவுகளின் நிலை Posted on : 2013-07-19 Print

கேள்வி :
பிரிவுகள் நரகம் செல்லும் என இந்த ஹதீஸில் வந்துள்ளது. நரகம் செல்லும் பிரிவுகள் நரகிலிருந்து வெளியேறுவார்களா? அல்லது நிரந்தரமாக தங்குவார்களா?
 
பதில் :
பிரிவுகள் நரகிலிருந்து வெளியேறுவார்களா அல்லது வெளியேற மாட்டார்களா என்பது இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பிரிவுகளின் செயல்பாடுகளைக் காணும் போது வெளியேற மாட்டார்கள் என்பதே தெட்டத் தெளிவாகின்றது.
 
இணை வைப்பவர்கள், குப்ரை செய்பவர்கள், பித்அத்தை செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள் என்பது குர்ஆனின் முடிவாகும் இந்த அடிப்படையில் பிரிவுகளில் இந்த அம்சங்களை நாம் காண்கிறோம்.
 
உதாரனத்திற்கு: தொழுகையை விடுதல், சகாத் கொடுக்காதிருத்தல், சூனியம் செய்தல், தாயத்துக் கட்டுதல், கப்ரை வணக்கம் செய்தல், மார்கத்தை பிரித்து பல பிரிவுகாலக ஆக்குதல். அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதிருத்தல், தாஃகூத்திடத்தில் தீர்ப்புக் கேட்டு செல்லுதல் போன்றவைகளாகும்.
 
யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விட்டான். (5 : 72)