73 பிரிவுகளில் சுவனம் செல்லும் கூட்டம் எது? Posted on : 2013-07-19 Print

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் வந்துள்ள பிரிவுகளில் சுவனம் செல்லும் கூட்டம் எது என்ற விபரம் வேறு ஹதீஸ்களில் காணப்படுகிறதா?
 
 
பதில் :
ஆம். இதன் விபரம் வேறு ஹதீஸில் வந்துள்ளது.
 
ஸஹீஹுள் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜாபோன்ற கிரந்தங்களில் உம்மத் பல பிரிவுகளாக பிரிந்து செல்லப்படும் காலத்தில் அப்பிரிவுகளில் ஒருவர் இணைந்தால் அவர் நரகத்தில் எறியப்படுவார். அக காலத்தில் அனைத்துப் பிரிவுகளையும் விட்டு பிரிந்து ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதன் தலைவரையும் பிடித்துக் கொள்ளும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள்.
 
ஆகவே பிரிவினை காலத்தில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளும் நரகமும், ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பு சுவனமும் செல்லும் என்பது நபி அவர்களின் தீர்ப்பாகும்.