இன்று 73 ஐ விட அதிகமான பிரிவுகள் காணப்படுகின்றன. Posted on : 2013-07-19 Print

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் 73 ஆகப் பிரியும் என்று காணப்படுகிறது. அதே நேரத்தில் இன்று 73 ஐ விட அதிகமான பிரிவுகள் காணப்படுகின்றன. எனவே இந்த ஹதீஸ் யதார்த்ததிட்கு முரணாகக் காணப்படுவதால் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹாஹக் காணப்பட்டாலும் யதார்த்தத்தில் இது பலஈனமான ஹதீஸ் ஆகத்தான் நாம் கருத வேண்டும் என சிலர் கூறுகின்றனரே!
 
பதில் :
ஒரு நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் ஸஹீஹானதாக எங்களுக்குக் கிடைத்தால் அது வெளி தோற்றத்தில் குர்ஆணுக்கு அல்லது வேறு நபிமொழிக்கு அல்லது யதார்த்தத்திற்கோ முரண்படுவது போல் தோன்றினால் அதை நாம் முரண் இல்லாத முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் வஹி வஹியுடன் ஒரு போதும் முரண்பட முடியாது. அதே போன்று யதார்த்தத்திற்கு முரண்படுவது போல் தோன்றினால்: அவர்கள் விளக்கத்திற்கு குழப்பம் இருக்கிறது என்பதே அதன் பொருள்.
 
இப்போது அந்த ஹதீஸ் அப்படி முரன்படுகின்றதா என்பதனைக்கவநித்து முரன்படாத் விதத்தில் விளங்குவோம்.
 
ஹதீஸில் 73 கூட்டங்கலாகப் பிரியும் என்று வந்துள்ளது. யதார்த்தத்தில் 73 ற்கும் அதிகமாக காணப்படுகின்றது என்றால், ஹதீஸில் கூறப்பட்ட பிரிவுகள் அடிப்படையான பிரிவுகளேயன்ரி உப பிரிவுகள் அல்ல என்று விளங்க வேண்டும். உதாரனத்திற்கு "ஷீஆ" என்ற பெயரில் ஒரு அடிப்படையான பிரிவு காணப்படுகிறது. அதற்குள் பல உப பிரிவுகள காணப்படுகின்றன.
 
"அஹ்லுல் குர்ஆன்" என்ற பெயரில் ஒரு அடிப்படையான பிரிவு காணப்படுகின்றது. இதற்குள்ளும் இன்னும் சில உப பிரிவுகள் காணப்படுகின்றன.
 
இதே போன்று "அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாத்" என்ற பெயரில் ஒரு பிரிவு காணப்படுகின்றது. அதற்குள்ளும் பல உப பிரிவுகள் காணப்படுகின்றன.
 
இந்த அடிப்படையில் நாம் நோக்கினால், இன்னும் 73 பிரிவுகள் தோன்றவில்லை; அதனையும் விட குறைவாகவே காணப்படுகிறது என்ருவிலங்கிக் கொள்ளலாம்.
 
அல்லது இன்னொரு கோலத்திலும் இந்த ஹதீஸை விளங்கலாம். அதாவது ஹதீஸில் வந்துள்ள எண்ணிக்கை நோக்கமல்ல. மாறாக உம்மத் அதிகமான பிரிவுகளாக பிரியும் என்ற உண்மையை காட்டவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ஸஹீஹுள் புகாரியில் வந்துள்ள ஒரு ஹதீஸை விளக்கமாகக் கொள்ளலாம்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஃமின் ஒரு குடலால் சாப்பிடுகின்றான். ஒரு காபிர் ஏழு குடல்களால் சாப்பிடுகின்றான். ஆனால் உண்மையில் யதார்த்தத்தில் காபிருக்கு ஏழு குடல் கிடையாது. இந்த எண்ணிக்கையை பயன்படுத்தியது அதிகமாக சாப்பிடுபவர்கள் என்பதை காட்டுவது தான் நோக்கமாகும்.
 
இதே போன்று இந்த உம்மத் சரியாக 73 பிரிவுகளாக என்பது நோக்கமல்ல. அதிகமான பிரிவுகளாக பிரிவார்கள் என்பதே நோக்கம் என்பது மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. இக்கருத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஹதீஸ் ஸஹீஹுள் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிமிலும் பின்வருமாறு காணப்படுகின்றது.
 
ஹுதைபா (ரலி) அறிவிக்கும் அறிவிப்பில் உம்மத் ஒரு காலத்தில் பல குழுக்களாக பிரியும். அக்காலத்தில் ஒரு முஸ்லிம் என்ன செய்யவேண்டும் என நபித்தோழர் கேட்க "அந்த அணைத்து பிரிவுகளையும் விட்டு பிரிந்து ஜமாஅதுல் முஸ்லிமீனோடு இணைந்துக் கொள்" என்று கூறினார்கள்.
 
இந்த அறிவிப்பில் "பிரிவுகள்" என்று மட்டுமே வந்துள்ளது. 73 எனும் எண்ணிக்கை வரவில்லை. இதன் அடிப்படையில் 'உம்மத்' உதாரனத்திற்கு 90 பிரிவுகளாக பிரிந்தாலும் சரி. ஹதீஸிற்கு முரண்பாடோ யதார்ததிட்கு மாற்றமாகவோ இல்லை. மாறாக ஒரு ஹதீஸ் மற்றொரு ஹதீஸிற்கு விளக்கமாகவே அமைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.