உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியல் Posted on : 2013-07-19 Print

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற  ஹதீஸின் அறிவிப்பாளர் பட்டியலில் பொய்யர்களும் இட்டுக்கட்டப்பட்டவர்களும் இருக்கிறார்கள். எனவே இந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது என்று சிலர் கூறினார்கள்.
 
 
பதில் :
இதுவரை நாம் முன்வைத்த ஹதீஸில் எவ்வித் குழப்பமோ, பலயீனமோ, பொய்யான அறிவிப்பாளர்களோ, இட்டுக்கட்டுபவர்களோ கிடையாது.
 
பொய்யான அறிவிப்பாளர் காணப்படும் "ரிவாயத்" அறிவிப்பு வேறு ஒரு அறிவிப்பாகும். அந்த அறிவிப்பு பின்வருமாறு :
 
எனது உம்மத் எழுபத்து சொச்ச பிரிவுகளாக பிரியும். அணைத்து பிரிவுகளும் சுவனம் நுழையும். (அதில்) ஒரு பிரிவைத் தவிர. அது "ஸனாதிகா" என்ற பிரிவாகும். 
(அல் அஹாதீது லயீபா வல் மவ்ளூஆ : 1035)
 
'ஸனாதிகா' என்பதன் பொருள் "இறை மறுப்பாளர்கள் - நாத்திகவாதிகள்" என்பதாகும்.
 
இதுதான் இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் மஆத் பின் யாசீன் காணப்படுகிறார். இவர் "மஜ்ஹூல் - இனங்கான்ப்படாதவர்". இவரின் ஷெய்க் அப்ரத் என்பவராகும். இவரை இமாம் இப்னு குஸைமா 'பொய்யர்' என்றும் 'இட்டுக்கட்ட்பவர்' என்றும் கூறுகின்றார்.
 
மேலும் இந்த அறிவிப்பில்,
நயீம், யஹ்யா, யாசீன் போன்ற மூன்று நபர்கள் காணப்படுகின்றார்கள். "இவர்கள் இட்டுக்கட்டுப்பட்ட செய்தி அறிவிப்பாளர்கள் " என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.
 
இதன் சரியான அறிவிப்பு, 
"எனது உம்மத் 73 ஆகப் பிரியும்; அதில் 72 நரகமும் ஒரு பிரிவு சுவனமும் செல்லும். அந்தப் பிரிவு நானும் எனது தோழர்களும் இன்று இருப்பது போன்று இருப்பவர்கலாகும் " என்பதாகும். இந்த ஹதீஸை யாசிர் என்பவர் திரிபுபடுத்தி வேறு விதமாக இட்டுக்கட்டியுள்ளார்.
 
இந்த இட்டுக்கட்டுப்பட்ட செய்தியை தான் ஒரு சிலர் விளக்கமின்றி எடுத்த எடுப்பிலேயே "73 ஆக உம்மத் பிரியும்" என்ற ஹதீஸ் ஸஹீஹ் இல்லையென்று கூறி விடுகின்றார்கள்.