உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற நபிமொழி Posted on : 2013-07-19 Print

கேள்வி :
"உம்மத் 73 ஆகப் பிரியும்" என்ற நபிமொழியை தரமுடியுமா ?
 
 
பதில் :
ஹதீஸ் பின்வருமாறு :
 
முஆவியா பின் அபீஸுப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
 
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு மத்தியில் (ஒரு நாள்) எழுந்து " அறிந்துக் கொள்ளுங்கள் ! நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் 72 மார்கங்களாக பிரிந்தனர். நிச்சயமாக இந்த மார்க்கம் 73 ஆகப் பிரியும். (அதில்) 72 நரகத்திலிருக்கும் ஒன்று சுவனத்திலிருக்கும். அது 'அல்ஜமாஅத்' கூட்டமைப்பு" என்று கூறினார்கள். 
 
(அவனுல் மஃபூத் - அபீதாவூத் எண் : 4586, அல் அஹாதீசுஸ் ஸஹீஹா எண் - 204)