ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதனது இமாமையும் பற்றிப் பிடிப்பீராக...
அனைத்துப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்குவீராக!
(ஸஹீஹுல் புகாரி 3606)
யார் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு ஒரு சாண் மாறு செய்கிறாரோ திட்டமாக அவர்
தன் கழுத்திலிருந்து இஸ்லாத்தின் வளையத்தை களைந்து விட்டார்.
(முஸ்தத்ரக் ஹாகிம் - 402)
மூன்று விடயங்களில் ஒரு விசுவாசியின் உள்ளம் துரோகம் செய்யாது.
செயல்களை அல்லாஹ்வுக்கென்று தூய்மையாக்குதல், தலைவர்களுக்கு
கட்டுப்படுதல், ஜமாஅதுல் முஸ்லிமீனில் இணைந்திருத்தல்.
(முஸ்தத்ரக் ஹாகிம் 294)
யார் ஜமாஅத்துல் முஸ்லிமீனை விட்டும் ஒரு சாண் பிரிகின்ராரோ அவர் தன
கழுத்திலிருந்து இஸ்லாத்தின் வளையத்தை களைந்து விட்டார்.
(தபராணி கபீர் 13604)
இந்த கிப்லாவை முன்னோக்குபவர்களில் எவருடைய இரத்தமும்
(போக்குவதற்கு)ஹலால் இல்லை.(இந்த) மூன்று விடயங்களை ஹலால்
ஆக்கிக் கொண்டவர்களை தவிர. உயிருக்கு பகரமாக உயிர்(கொலை செய்தவர்),
திருமணம் முடித்து விபச்சாரம் செய்தவர் , ஜமாஅத்துல் முஸ்லிமீனை விட்டுப்
பிரிந்தவர் அல்லது ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருந்து வெளியேறியவர்
ஆகியோரை கொலை செய்தலாகும்.
(இப்னு அபீஷைபா)